மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத சமூகத்தை நாகரிகம் அடைந்ததாகக் கருத முடியாது

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத எந்தவொரு சமூகத்தையும் நாகரிகம் அடைந்ததாகக் கருத முடியாது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

News image
Updated On :11 ஜூன் 2013, 7:58 pm

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத எந்தவொரு சமூகத்தையும் நாகரிகம் அடைந்ததாகக் கருத முடியாது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

தில்லியில் தேசிய பெண்கள் ஆணைய தலைமையகக் கட்டட அடிக்கல் நாட்டும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடந்த டிசம்பர் 16-ம் தேதி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி உயிரிழந்த 23 வயது மருத்துவ மாணவியின் நினைவாக "நிர்பய பவன்' என்ற பெயரில் இக்கட்டடம் கட்டப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணையமைச்சர் கிருஷ்ணா தீரத், தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் மம்தா சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:÷""பெண்களுக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான செயல்கள், சட்டம்-ஒழுங்கு தொடர்பானது மட்டுமல்ல, சமூகத்தின் அக்கறையை பற்றியதும் கூட. வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் அருகே இருப்பவர்கள், அவர்களை காப்பாற்றாமல் பாராமுகமாக நடந்துகொள்கின்றனர். சமீப காலமாக நடைபெற்று வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களைப் பார்க்கும்போது, பண்பட்ட சமூகத்துக்கான அடையாளங்களை நாம் இழந்துவிட்டோம் என்றே தோன்றுகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்காத, அவர்களை கண்ணியத்துடன் நடத்தாத சமூகத்தை நாகரிகம் அடைந்ததாகக் கருத முடியாது.

பெரும்பாலான நேரங்களில் போதிய ஆதாரம் மற்றும் சாட்சியங்கள் இல்லை என்ற காரணத்தால் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிவிடுகின்றனர். மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்'' என்றார் பிரணாப்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.