நடிகர் மோகன் லால் நாயகனாக நடித்து வெளியான திரிஷ்யம் - 3 திரைப்படம் இன்று(ஜூன் 18) ஓடிடியில் வெளியாகியுள்ளது.
மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் - நடிகர் மோகன்லால் கூட்டணியில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
திரிஷ்யம் - 2 படத்தின் தொடர்ச்சியாக, ஜார்ஜ் குட்டியின் மூத்த மகள் அஞ்சுவின் திருமண ஏற்பாடுகளுடன் திரிஷ்யம் - 3 படத்தின் கதை தொடங்குகிறது.
முந்தைய பாகங்களில் நடித்த மோகன்லால், மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், ஆஷா சரத் ஆகியோர் மூன்றாம் பாகத்திலும் தங்கள் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
கடந்த மே 21 அன்று நடிகர் மோகன் லாலின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான இப்படம், 7 நாள்களில் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், திரிஷ்யம் 3 திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Summary
Drishyam 3, starring Mohanlal, has been released on OTT today (June 18).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓடிடியில் பார்க்க வேண்டிய ரொமான்டிக் படங்கள்!

கட்டா குஸ்தி - 2! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (ஜூலை 31 - ஆகஸ்ட் 6)

ஓடிடியில் வெளியான மதுபாலா - அபர்ணா பாலமுரளியின் புதிய படம்!

கான் சிட்டி! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (ஜூலை 24 - 30)
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



