மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

11 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு பெற்றும் சுரங்கப் பணிகளைத் தொடங்காத என்டிபிசி, செயில் உள்ளிட்ட 12 நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Updated On :11 ஜூன் 2013, 7:58 pm

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு பெற்றும் சுரங்கப் பணிகளைத் தொடங்காத என்டிபிசி, செயில் உள்ளிட்ட 12 நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்தது. இதற்கான உரிமங்களைப் பெற்ற பிறகும் பல நிறுவனங்கள் இன்னும் சுரங்கப் பணிகளைத் தொடங்கவில்லை. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஜே.எஸ்.பி.எல்., ஜி.வி.கே. பவர் உள்ளிட்ட 11 நிறுவனங்களுக்கு மத்திய நிலக்கரி அமைச்சகம் கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியது.

அதைத் தொடர்ந்து, சுரங்கப் பணிகளைத் தொடங்காத என்.டி.பி.சி., செயில் உள்ளிட்ட மேலும் 12 நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. உரிய விளக்கம் தராத பட்சத்தில் சுரங்க ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.