நிலக்கரிச் சுரங்க முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜிண்டால் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிலக்கரித்துறை இணை அமைச்சர் தாசரி நாராயண ராவ் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு பல்வேறு நிலக்கரிச் சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரித்து வரும் சி.பி.ஐ. இதுவரை 11 வழக்குகளை (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜிண்டால் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிலக்கரித்துறை இணை அமைச்சர் தாசரி நாராயண ராவ் மீது சி.பி.ஐ. 12ஆவது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, ஜிண்டாலின் வீடு மற்றும் அலுவலகங்கள், தாசரி நாராயண ராவின் வீடு மற்றும் அலுவலகம் உள்பட 15 இடங்களில் சி.பி.ஐ. செவ்வாய்க்கிழமை அதிரடிச் சோதனைகளை நடத்தியது. தில்லியில் பிருத்விராஜ் சாலையில் உள்ள ஜிண்டாலின் வீட்டிலும், பிகாஜி காமா பகுதியில் உள்ள அவரது வீட்டிலும், ஹைதராபாதில் உள்ள தாசரி நாராயண ராவின் வீடு மற்றும் அலுவலகத்திலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
ஜிண்டால் மற்றும் ராவ் மட்டுமின்றி அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களும் சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஜிண்டால் ஸ்டீல் அண்டு பவர் லிமிடெட் (ஜே.எஸ்.பி.எல்.) நிறுவனம் மற்றும் ககன் ஸ்பாஞ்ச் நிறுவனத்துக்கு ஜார்க்கண்ட் மாநிலம் பீர்பூமியில் 2008இல் நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கப்பட்டது. ஜிண்டாலின் மற்ற நிறுவனங்களான ஜிண்டால் ரியாலிட்டி, என்.டி. எக்சிம் மற்றும் ராவின் சௌபாக்யா மீடியா ஆகியவற்றின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜிண்டால், ராவ் மற்றும் அவர்களது நிறுவனங்கள் குற்றச்சதியில் ஈடுபட்டதாகவும் மோசடி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களைப் புரிந்துள்ளதாகவும் சி.பி.ஐ. தனது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மாநிலங்களைவை எம்.பி.யான தாசரி நாராயண ராவ், மத்திய நிலக்கரித் துறை இணை அமைச்சராக 2004-06 மற்றும் 2006-08 காலகட்டத்தில் பதவி வகித்தார். அவரிடம் நிலக்கரிச் சுரங்க முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளது.
இதனிடையே, சி.பி.ஐ. நடத்திய சோதனைகள் குறித்து ஜிண்டாலின் ஜே.எஸ்.பி.எல். நிறுவனத் தலைவர் மனு கபூர் கூறுகையில், ""சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் எங்கள் நிறுவனம் வலுவான நீதி நெறிகளின்படி நடத்தப்படுகிறது. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
விசாரணையின் இந்தக் கட்டத்தில், சி.பி.ஐ.க்கு எங்கள் நிறுவனம் முழு ஒத்துழைப்பு அளிக்கும்'' என்றார்.
பா.ஜ.க. வரவேற்பு: இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர், ""நவீன் ஜிண்டால் மற்றும் தாசரி நாராயண ராவ் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதையும் அவர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளதையும் எங்கள் கட்சி வரவேற்கிறது. பா.ஜ.க. தலைவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையிலேயே இவ்வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியது. இந்த ஊழல் வழக்கில் பணப் பரிவர்த்தனை எப்படியெல்லாம் நடைபெற்றுள்ளது என்பதை சி.பி.ஐ. கண்டறிய வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில், லஞ்சம் கொடுக்காமல் ஒரு ரேஷன் கார்டு கூட பெற முடியாது.
எனவே, இந்த நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கிலும் ஆளுங்கட்சியான காங்கிரஸýக்குதான் பணம் சென்றிருக்குமே தவிர, அரசுக்குச் சென்றிருக்காது. இவ்வழக்கை மூடி மறைக்க முயலும் அரசு, சி.பி.ஐ.க்கு நெருக்கடி கொடுக்கிறது'' என்றார்.
ஷிண்டே கருத்துக் கூற மறுப்பு: நவீன் ஜிண்டால் மற்றும் தாசரி நாராயண ராவ் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேவிடம் தில்லியில் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, ""இது சி.பி.ஐ.யின் நடவடிக்கை. அது குறித்து நான் கருத்து கூற மாட்டேன். ஜிண்டால் இதில் சம்பந்தப்பட்டிருந்தால், சட்டப்படி சி.பி.ஐ. நடவடிக்கை எடுக்கலாம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண் வெட்டிக் கொலை: கணவரிடம் போலீஸாா் விசாரணை

இளம் இந்தியா்கள் நாடாளுமன்ற நிகழ்வு: சிறந்த மாணவா்களுக்கு விருது
சாலையில் இடையூறாக பதாகை வைத்தால் ரூ.25,000 அபராதம்
கடன் பாதுகாப்புக் காப்பீட்டின் முக்கியத்துவம்!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI


