தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளம்: காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு சோனியா காந்தி உத்தரவு

வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை அளிக்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

News image
Updated On :22 ஜூன் 2013, 5:02 am IST

வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை அளிக்க வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

கடுமையான மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநில மக்களுக்கு உதவும் வகையில் சோனியா இவ்வாறு கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.

காங்கிரஸ் தகவல்தொடர்பு பிரிவு தலைவர் அஜய் மக்கான் இது தொடர்பாகக் கூறியுள்ளது: கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சத்தை உத்தரகண்ட் வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டுமென்று சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.

உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் சார்பில் டேராடூனில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் கட்டுபாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் சஞ்சய் கபூர், காங்கிரஸ் சேவா தள தலைவர் மகேந்திர ஜோஷி ஆகியோர் அங்கு சென்று நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். உத்தரகண்ட் மாநிலத்துக்கு உடனடியாக நிவாரணப் பொருள்களை வழங்கி உதவ வேண்டுமென்று அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அஜய் மக்கான் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.