உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, பல்வேறு பகுதிகளில் இன்னமும் வெளியேற முடியாமல் ஆங்காங்கே சிக்கித் தவிக்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஹரித்துவாரில் வெள்ளிக்கிழமை கங்கையில் மிதந்த 40 சடலங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 556ஆக அதிகரித்துள்ளது. சாவு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும் என்று அஞ்சப்படுகிறது.
ராணுவம் மட்டுமல்லாது, சஷஸ்த்ர சீமா பல், இந்திய-திபெத் எல்லை போலீஸ், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் எல்லைப்புற சாலை நிறுவனம் ஆகியவை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 100, 101, 102, 108 உள்ளிட்ட அவசர சேவைகள் 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசின் மீட்பு நடவடிக்கை மூலம் இதுவரை வெள்ளத்தில் சிக்கிய 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் பகுதிகளிலிருந்து மட்டும் 9,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
ஹரித்துவார் மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் ராஜீவ் ஸ்வரூப் கூறுகையில், ""ஹரித்துவாரில் கங்கை நதியில் மிதந்த 40 சடலங்கள் வியாழக்கிழமை மீட்கப்பட்டன'' என்றார்.
கண்காணிப்பு அதிகாரி நியமனம்: மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவது குறித்து, தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
முன்னாள் உள்துறைச் செயலாளர் வி.கே.துகல் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொள்வார்'' என்றார் ஷிண்டே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
‘கப்பல்கள் அழிக்கப்படும்’.. அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!

தோ்தலில் மீண்டும் 2ஜி சுனாமி!

தமிழகத்தில் 3 மாதங்களில் 100 உடல் உறுப்பு தானங்கள்: மருத்துவ வரலாற்றில் முதல்முறை
ஆட்சி மாற்றம் கண்டிப்பாக இருக்கும்! - தவெக பொருளாளா் பி. வெங்கடரமணன் சிறப்பு நோ்காணல்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


