நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

50,000 டூ 70 லட்சம்... ஒரே நாளில் உலகப் பிரபலமான கோல்கீப்பர் வோசின்ஹா!

ஒரே இரவில் உலகப் பிரபலமான கோல்கீப்பர் வோசின்ஹாவைப் பற்றி...

News image

கோல் கீப்பர் வோசின்ஹா.

Updated On :16 ஜூன் 2026, 7:19 pm IST

பிஃபா உலகக்கோப்பையில் வெறும் 5 லட்சம் மக்கள்தொகை கொண்ட கேப் வெர்டே அணியின் கோல்கீப்பர் ஒரே நாளில் உலகப் பிரபலமாகியிருக்கிறார்.

ஃபிபா உலகக்கோப்பைத் தொடரின் 14-வது போட்டி அமெரிக்காவின் ஜியார்ஜியா, அட்லாண்டா திடலில் நேற்று (ஜூன் 15) நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஹெச் பிரிவில் நட்சத்திர வீரர்கள் கொண்ட ஐரோப்பிய சாம்பியன் ஸ்பெயின் அணியை மிகச் சிறிய நாடான கேப் வெர்டே அணி எதிர்கொண்டது.

ஸ்பெயின் அணி எளிதில் வெற்றி பெறும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், கேப் வெர்டே அணியின் கோல்கீப்பர் வோசின்ஹாவின் சிறப்பான ஆட்டத்தால், இந்தப் போட்டி கோல்கள் இன்றி 0-0 என்ற நிலையில், சமனில் முடிந்தது.

தொடக்கம் முதலே ஸ்பெயின் வீரர்களின் அதிரடி தாக்குதலை சமாளித்த கேப் வெர்டே அணியின் கோல்கீப்பர் வோசின்ஹா, ஸ்பெயினின் 7 கோல்களைத் தடுத்து உலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஆட்டத்தின் முடிவில், வோசின்ஹா ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். கால்பந்து உலக கோப்பையின் ஒரே போட்டியால் கேப் வேர்டே அணியின் கோல் கீப்பர் வோசின்ஹா ஒரே நாளில் உலகப் பிரபலமாக உயர்ந்திருக்கிறார்.

அவரின் இன்ஸ்டாகிராம் பின்தொடர்வோரின் எண்ணிக்கை 50,000-லிருந்து சில மணி நேரங்களிலேயே 50 லட்சமாக உயர்ந்து. கடந்த 12 மணிநேரத்துக்குள் அவரின் பின்தொடர்வோரின் எண்ணிக்கை சுமார் 75 லட்சமாக உயர்ந்துள்ளது.

Summary

By the time Vozinha came out for a post-match chat, the number of his followers on Instagram had gone past 1.5 million. By the time of writing this, the number of his followers was closing in on the 7 million mark.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.