கர்நாடகத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரை முதல்வராக்காதது அந்தச் சமுதாய மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் அவர் கூறியது: காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக யாரை நியமிக்க வேண்டுமென்பதை கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. இதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியது அனைவரின் கடமை.
எனக்கு முதல்வர் பதவி தரவில்லை என்பதால் வடகர்நாடகத்தில் வன்முறையில் ஈடுபட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கட்சி மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டு சட்டம் - ஒழுங்கை பராமரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு முதல்வர் பதவி தரவில்லையே என்ற ஏமாற்றம் அந்தச் சமுதாய மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைக்கு கட்சி மேலிடம் தகுந்த நேரத்தில் தீர்வு காணும்.
கட்சி மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன். கட்சியின், ஆட்சியின் நலன் கருதி அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் செயலாற்ற வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாற்றம் தந்த மதிப்பீடு!

மேஷ ராசிக்கு பதவி உயர்வு! இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (மே 16 2026) 12 ராசிகளுக்கும்! எதிர்ப்புகள் அகலும் இந்த ராசிக்கு!

குடும்பம் எனும் நிறுவனம் சிதைகிறது
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

