காஷ்மீரின் துயரத்தைக் கேளுங்கள்!
மழை வெள்ளத்தால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் துயரம் நீடிக்கிறது. இயல்பு வாழ்க்கைக்கு அந்த மாநிலம் திரும்புவதற்கான சூழ்நிலை தற்போதுவரை தென்படவில்லை.


மழை வெள்ளத்தால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் துயரம் நீடிக்கிறது. இயல்பு வாழ்க்கைக்கு அந்த மாநிலம் திரும்புவதற்கான சூழ்நிலை தற்போதுவரை தென்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம், குடிநீர் வசதியில்லை. அங்குள்ளவர்களுக்கு தேவையான போர்வைகளும், உணவுகளும் வெகுதொலைவில் இருந்தும், அருகில் உள்ள பகுதிகளில் இருந்தும் கொண்டு வரப்படுகின்றன. எனினும், அந்தப் பொருள்களின் தேவையானது, விநியோகத்தைவிட அதிகமாக உள்ளது.
பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள அந்த மாநிலத்துக்கு நாட்டு மக்கள் அனைவரும் உதவ வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
இந்த தேசியப் பணியில், நீங்கள் எளிதில் பங்கேற்கும் வகையில், "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில் ரூ.2.50 லட்சத்தை தொடக்க நிதியாக வழங்கி, "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் காஷ்மீர் நிவாரண நிதி'யைத் தொடங்கியுள்ளோம். இதில் கீழ்க்காணும் 3 வழிமுறைகளில் ஒன்றின் மூலம் உங்கள் பங்களிப்பை வழங்கலாம்.
வங்கிக்கான SWIFT-CODE: IDIBINBBPAD. IFSC CODE: IDIB000P001.
ஆன்லைனில் பணம் செலுத்தியவர்கள், அதுதொடர்பான விவரங்களை, kashmirrelieffund@newindianexpress.com-க்கு அனுப்பலாம்.
நிதியளித்தோர் குறித்த முதல் பட்டியல், தினமணி நாளிதழில் வரும் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிடப்படும். இந்த நிவாரணத் தொகை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் துயரைப் போக்குவதற்கான பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் ஒப்படைக்கப்படும்.
காஷ்மீர், துயரத்தில் வாடுகிறது. அதற்கு உதவ வேண்டியது நமது கடமை.
மனோஜ் குமார் சொந்தாலியா,
தலைவர் & நிர்வாக இயக்குநர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...