காஷ்மீருக்கு உதவ கடைசி வாய்ப்பு!
இதுவரை கண்டிராத கடுமையான இயற்கைச் சீற்றத்தால் உயிரிழந்த நூற்றுக்கணக்கானோரை நினைத்து, ஜம்மு-காஷ்மீர் இன்னமும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.


இதுவரை கண்டிராத கடுமையான இயற்கைச் சீற்றத்தால் உயிரிழந்த நூற்றுக்கணக்கானோரை நினைத்து, ஜம்மு-காஷ்மீர் இன்னமும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இதில் தப்பிப் பிழைத்தவர்களோ உடைமைகள் அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். அவர்களது இப்போதையத் தேவை மறுவாழ்வு. பல பகுதிகளிலும் இருந்து உதவிகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பை மதிப்பிட்டால், அவர்கள் இயல்பு வாழ்கைக்குத் திரும்ப மென்மேலும் நிதியுதவியும், பொருளுதவியும் தேவைப்படுகின்றன.
இந்த தேசியப் பணியில், நீங்கள் எளிதில் பங்கேற்கும் வகையில், "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில் ரூ.2.50 லட்சத்தை தொடக்க நிதியாக வழங்கி, "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் காஷ்மீர் நிவாரண நிதி'யைத் தொடங்கியுள்ளோம். இதில் கீழ்க்காணும் 3 வழிமுறைகளில் ஒன்றின் மூலம் உங்கள் பங்களிப்பை வழங்கலாம்.
வங்கிக்கான SWIFT-CODE: IDIBINBBPAD. IFSC CODE: IDIB000P001.
ஆன்லைனில் பணம் செலுத்தியவர்கள், அதுதொடர்பான விவரங்களை, kashmirrelieffund@newindianexpress.com-க்கு அனுப்பலாம்.
நிதியளித்தோர் குறித்த முதல் பட்டியல், தினமணி நாளிதழில் வரும் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிடப்படும். இந்த நிவாரணத் தொகை, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் துயரைப் போக்குவதற்கான பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் ஒப்படைக்கப்படும்.
காஷ்மீர், துயரத்தில் வாடுகிறது. அதற்கு உதவ வேண்டியது நமது கடமை.
மனோஜ் குமார் சொந்தாலியா,
தலைவர் & நிர்வாக இயக்குநர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...