ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

"வெளிநாடுவாழ் பிரதமர்' மோடி: அகமது படேல் தாக்கு

""வெளிநாடு வாழ் பிரதமராக நரேந்திர மோடி செயல்படுகிறார்'' என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின்

News image
Updated On :24 மே 2015, 10:18 pm

எம். ஆனந்த்

""வெளிநாடு வாழ் பிரதமராக நரேந்திர மோடி செயல்படுகிறார்'' என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலர் அகமது படேல் குற்றம்சாட்டினார்.
 இதுகுறித்து குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: வெளிநாடு வாழ் பிரதமராக மோடி செயல்படுகிறார்.
 மோடி அரசு விவசாயிகளுக்கும், சாதாரண மக்களுக்கும் வாக்குறுதிகளை அளித்திருந்தது. கடந்த ஓராண்டில் ஒரு வாக்குறுதி கூட நிறைவேற்றப்படாததால் அந்த மக்கள் கோபம் அடைந்துள்ளனர். தற்போது, தொழிற்சாலைகள், தொழிலதிபர்கள் ஆகியவற்றைப் பற்றி மட்டுமே பாஜக அரசு பேசி வருகிறது. அரசின் மேல்மட்டத்தில் உள்ளவர்கள், வெளிநாடுகளுக்குச் செல்லும் போது தொழிலதிபர்களை மட்டுமே உடன் அழைத்துச் செல்கின்றனர்.
 கூட்டுறவுத் துறையில் எந்த வித அரசியலும் இல்லாமல் இருந்தது. பாஜக அரசு அந்தத் துறையை அரசியல் மூலம் சிதைத்துவிட்டது என்றார் அகமது படேல்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.