/

ஜம்மு-காஷ்மீரில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து: சிறுமி பலி, 16 பேர் காயம்

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளனர். 16 பேர் காயமடைந்துள்ளனர்.

Updated On :10 ஆகஸ்ட் 2016, 6:56 am

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளனர். 16 பேர் காயமடைந்துள்ளனர்.

பிஷ்னா டவுன் பகுதியில் மாணவர்களை ஏற்றிச்சென்ற பள்ளி பேருந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குஷ்பூ (12) வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தார்.  மேலும் 16 மாணவர்கள் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.