புதுதில்லி: ருபாய் 5000-க்கு மேல் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்வது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 19-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 8-ஆம் தேதி 5000 ருபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் கடந்த 19-ஆம் தேதி அன்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை ஒன்றில், 'ரூபாய் 5000 அல்லது அதற்கு மேல் வங்கிகளில் டிசம்பர் 30-ஆம் தேதி வரை ஒரே ஒருமுறை மட்டுமே டெபாசிட் செய்யலாம் என்றும், அவ்வாறு டெபாசிட் செய்பவர்கள் கூட குறைந்த பட்சம் இரண்டு வங்கி அதிகாரிகள் முன்னிலையில் ஏன் அந்த தொகை தாமதமாக டெபாசிட் செய்யப்படுகிறது என்பதற்கு விளக்கமளிக்க வேண்டும்' என்றும் கூறப்பப்பட்டிருந்தது.
ஆனால் கடந்த திங்கள் அன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, 'ருபாய் நோட்டுகளை டெபாசிட் செய்பவர்களிடம் எந்த விதமான விசாரனையும் நடத்தப்படாது என்று அறிவித்தார். இதனால் ஒரு குழப்பமான சூழல் நிலவியது.
இந்நிலையில் டிசம்பர்-19-ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொள்வதாக இந்திய ரிசர்வ் வங்கி இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies

மும்பை இந்தியன்ஸுக்காக அதிக ரன்கள்; சனத் ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளிய ரிக்கல்டான்!
அம்மா அம்மாதான்! நூறு சாமி பாடல் புரோமோ!

அற்புதத்திற்கு குறைவில்லாத ஒன்று... மாளவிகா மோகனன் பகிர்ந்த பதிவு!
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


