

உலகெங்கும் பல நாடுகளை அச்சுறுத்தி வரும் ஸிகா வைரஸுக்கான தடுப்பு மருந்து தயாரிப்பதில் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளதாக ஹைதராபாத்தை சேர்ந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
பாரத் பயோடெக் எனும் மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஒர் ஆண்டு முன்னதாகவே ஸிகா வைரஸை தடுப்பதற்கான மருந்து தயாரிக்கும் பணியை தொடங்கிவிட்டதாக அதன் தலைவர் மற்றும் மேலான் இயக்குநர் கிருஷ்ணா எல்லா கூறினார்.
அந்த மருத்து தயாரிப்பதில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இதற்கான காப்புரிமைக்கு விண்ணப்பிக்க இருப்பதாகவும் கிருஷ்ணா கூறினார்.
ஸிகா வைரஸை தடுப்பதற்கான மருந்து தயாரிக்கப்பட்டு, விலங்குகளிடம் ஆய்வு செய்யும் நிலையில் உள்ளது. விரைவில் அந்த மருந்து விற்பனைக்கு வரும் என்றார் கிருஷ்ணா.
ஏடிஸ் வகை கொசுக்களால் பரவும் ஸிகா வரைஸ் தற்போது உலகில் உள்ள 23 நாடுகளில் பரவியுள்ளது. பிரேசிலில் மட்டும் 3530 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்ப்பினி பெண்களை தாக்கும் இந்த வைராஸால் பிறக்கும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.