இந்தியாவுக்கான ஆஸி. தூதர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹரிந்தர் நியமனம்

இந்தியாவுக்கான ஆஸ்திரேலியாவின் புதிய தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஹரிந்தர் சித்து நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கான ஆஸி. தூதர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹரிந்தர் நியமனம்
Updated on
1 min read

இந்தியாவுக்கான ஆஸ்திரேலியாவின் புதிய தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஹரிந்தர் சித்து நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறுவயதிலேயே குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த சித்து, அங்குள்ள சிட்னி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுநிலை பட்டமும், சட்டத்தில் பட்டமும் பெற்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையில் பணியாற்றி வரும் சித்து, இதற்கு முன்னதாக மாஸ்கோ மற்றும் டமாஸ்கஸ் பகுதிகளில் பணியாற்றியுள்ளார்.

``ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கமான நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய பசிபிக் பகுதியில் அமைந்துள்ள குறிப்பிட்டதக்க பங்குதாரராக இந்தியா உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 20 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வியாபாரம் நடைபெற்று வருகிறது'' என தூதரை நியமித்து ஆஸ்திரேலியாவின் வெளியுறவு துறை அமைச்சர் ஜூலி பிஷப் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 4.5 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள், ஆஸ்திரேலியாவின் கல்வி, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளனர் என்றார் ஜூலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com