புது தில்லி : தில்லியில் கடந்த வாரம் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 13 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவும் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இன்று காலை, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், சிறுமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும், தில்லியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கோரப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தில்லி அரசு உதவி செய்யும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று மதியம் சோனியா காந்தி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து, அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறுமியை சந்தித்து நலம் விசாரித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோர் இல்லாத நிலையில், தனது உறவினர் இல்லத்தில் வசித்து வந்ததாகவும், அவர் கடந்த 17ம் தேதி காணாமல் போன நிலையில், 18ம் தேதி காலை ரயில் தண்டவாளத்துக்கு அருகே மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிரடி படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு! இணையத்தில் வைரல்!
கரை இல்லாக் கல்வி...

எண்ணெய் கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள்! மாலுமிகளின் நிலை என்ன?

கிரக தோஷங்கள் நீக்கும் பெரியவாபுரம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

