அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

உத்தரகாண்ட் மாநிலத்துக்கு கன மழை எச்சரிக்கை

உத்தரகாண்ட் மாநிலத்துக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாத்ரீகர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :30 மே 2016, 6:53 am

டேஹ்ராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்துக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாத்ரீகர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்யும் என்றும், மலைப்பகுதி மாவட்டங்களான சம்பாவத், அல்மோரா, நைனிடால், டேஹ்ரி, பௌரி ஆகியவற்றில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டேஹ்ராடூன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கன மழை பதிவாகும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் விக்ரம் சிங் கூறியுள்ளார்.

பல பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்யும் என்றும், சில பகுதிகளில் பனிமழை பெய்யலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சார்தாம் யாத்திரை மேற்கொண்டுள்ள யாத்ரீகர்கள், மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தங்களது பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்றும், பாதுகாப்பு முகாம்களில் பத்திரமாக தங்கியிருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை உத்தர்காஷி மாவட்டத்தில் பெய்த கன மழைக்கு 6 பேர் பலியாகினர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள் மண்ணில் புதைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.