அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இந்தியாவின் மீது பயங்கரவாதிகள் துல்லிய தாக்குதல் நடத்துவார்கள்: மிரட்டும் ஹபீஸ் சயீத்!

எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வரும் இந்தியா மீது பங்கரவாதிகள் துல்லிய தாக்குதலை நடத்துவார்கள் என்று பாகிஸ்தான் தீவிரவாதியான ஹபீஸ் சயீத் மிரட்டல் விடுத்துள்ளான்.

News image
Updated On :7 நவம்பர் 2016, 2:55 pm

DIN

புதுடெல்லி: எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வரும் இந்தியா மீது பங்கரவாதிகள் துல்லிய தாக்குதலை நடத்துவார்கள் என்று பாகிஸ்தான் தீவிரவாதியான ஹபீஸ் சயீத் மிரட்டல் விடுத்துள்ளான்.

பாகிஸ்தான் அரசு ஆதரவுடன் செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கம் லஷ்கர் இ தொய்பா. இதன் நிறுவனர் ஹபீஸ் சயீத். இவன்தான் மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவனாவான். இவன் இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு  காஷ்மீரில் உள்ள மிர்புரில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினான். அப்போதுஅவன் கூறியதாவது;

இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்யய வேண்டும் என்று நினைத்தாரோ, அதனை செய்துள்ளார்.  இப்போது காஷ்மீர் விடுதலைக்காக போராடுபவர்கள் பதில் தாக்குதல் நடத்துவதற்கான முறை. அதன்படி காஷ்மீரில் திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்படும். அவர்கள் நடத்த உள்ள இந்த தாக்குதலை நீண்ட நாளைக்கு இந்தியாவால் மறக்கமுடியாது.

இவ்வாறு சயீத் பேசியுள்ளான்.

ஐ.நா. வால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு உள்ள ஹபீஸ் சயீத்தின் தலைக்கு அமெரிக்கா 1 கோடி அமெரிக்க டாலரை பரிசாக நிர்ணயித்துள்ளது. ஆனால் சயீத் இன்று வரை பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டு, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.