இந்தியாவில் நடைபெறும் புகையிலைக்கு எதிரான சர்வதேச மாநாடு: பாகிஸ்தான் பங்கேற்பு!
உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் தில்லியின் நோய்டாவில் நடைபெற்று வரும் புகையிலைக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் பாகிஸ்தான் பங்கேற்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


புதுதில்லி: உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் தில்லியின் நோய்டாவில் நடைபெற்று வரும் புகையிலைக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் பாகிஸ்தான் பங்கேற்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலை பரவல் தடுப்பு செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சகத்தின் சார்பில், தில்லிக்கு அருகே உள்ள நொய்டாவில் சர்வதேச புகையிலை எதிர்ப்பு மாநாடு நடைபெற்று வருகிறது.. இந்த மாநாடு நேற்று தொடங்கி வரும் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்திய -பாகிஸ்தான் இடையே நிலவும் சூழல் காரணமாக இந்த மாநாட்டில் அண்டைநாடான பாகிஸ்தான் பங்கேற்குமா என்பதில் சந்தேகம் நிலவி வந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் சார்பாக தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் முதன்மை செயலாளர் போஸியா பயாஸ் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் தேசிய சுகாதார சேவைகள் (ஒருங்கிணைப்பு மற்றும் வரன்முறை) அமைச்சகத்தின் டைரக்டர் ஜெனரல் ஆசாத் ஹபீஸ் இந்த தகவலை தெரிவித்துள்ளார் என்று செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...