அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

 எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்: இந்திய வீரர் ஒருவர் பலி!

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் இன்று நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.  

News image
Updated On :8 நவம்பர் 2016, 12:29 pm

DIN

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் இன்று நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.  

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ராஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதிகளில் இன்று காலை முதல் பாகிஸ்தான் ராணுவம்  இந்திய படை நிலைகள் மற்றும் பொதுமக்கள் வாழும் இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது.

குறிப்பாக இன்று காலையில் பாகிஸ்தான் ராணுவம் நவ்ஷேரா செக்டாரில் அத்துமீறிய தொடர் தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு இந்திய படைகள் சரியான பதிலடியை கொடுத்தது. முதலில் இப்பகுதியில் நடைபெற்ற  தாக்குதலில் இந்திய ராணுவத்திற்கு எந்தஒரு அசம்பாவித சம்பவமும் நேரிடவில்லை என்று ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ராணுவம் வெளியிட்டுள்ள தகவலில் பாகிஸ்தானின்  அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார் என்றும் தொடர்ந்து அந்த பகுதியில் கடும் சண்டை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.