அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஐநூறு, ஆயிரம் ருபாய் நோட்டுகளுக்கான தடையால் பாகிஸ்தானுக்கு ரூ. 500 கோடி இழப்பு?

இந்திய பிரதமர் மோடி, ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் நேற்றிரவு முதல் செல்லாது என்று செய்த அறிவிப்பின் காரணமாக, கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடும் பாகிஸ்தானுக்கு ரூ. 500 கோடி இழப்பு  ... 

News image
Updated On :9 நவம்பர் 2016, 1:54 pm

DIN

புதுதில்லி: இந்திய பிரதமர் மோடி, ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் நேற்றிரவு முதல் செல்லாது என்று செய்த அறிவிப்பின் காரணமாக, கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடும் பாகிஸ்தானுக்கு ரூ. 500 கோடி இழப்பு   என்று தகவல் வெளியாகி உள்ளது.

நமது அண்டை நாடான பாகிஸ்தான்  இந்திய ரூபாய் நோட்டுகளை போலியாக தயாரித்து இந்தியாவுக்குள் பரவச செய்கிறது. இதன் மூலம் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு சுமார் ரூ. 500 கோடி வருவாய் கிடைக்கிறது என்று இந்திய உளவுத்துறை, ’ரா,’ வருவாய் புலனாய்வுத்துறை மற்றும் சிபிஐ இயக்குநரகம் ஆகிய அமைப்புகளின் தகவல்களின்படி தெரிய வந்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு மட்டும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் வந்த போலி ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ. 1,600 கோடியாகும் என்று உளவு அமைப்புகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்திய அரசு விதித்துள்ள தடையின் காரணமாக பாகிஸ்தானுக்கு ரூ. 500 கோடி இழப்பு உண்டாகும் என்று தெரிய வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.