அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இந்திய குழந்தைகளை கவரும் வகையில் வெளியாகியுள்ள 'யூ டியூப் கிட்ஸ் ' ஆப்!

புகழ்பெற்ற இணைய காணொளி குழுமமான 'யூ ட்யூப்', இந்திய குழந்தைகளை கவரும் பொருட்டு, 'யூ டியூப் கிட்ஸ் '  என்னும் செயலியை இன்று அறிமுகம் செய்துள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2016, 11:06 am

DIN

புதுதில்லி: புகழ்பெற்ற இணைய காணொளி குழுமமான 'யூ ட்யூப்', நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் ஆவலாக உள்ள இன்றைய தலைமுறை இந்திய குழந்தைகளை கவரும் பொருட்டு, 'யூ டியூப் கிட்ஸ் '  என்னும் செயலியை இன்று அறிமுகம் செய்துள்ளது.

இன்றைய  குழந்தைகள் இணையத்தில் தங்களுக்கு தேவையான விஷயங்களை தேடி அடைவதில் தீராத ஆர்வம் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக காணொளிகளை தேடி பார்ப்பதில் ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கு உதவும் பொருட்டு, இந்திய குழந்தைகளுக்கு என்றே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 'யூ டியூப் கிட்ஸ்' என்னும்  காணொளி செயலியை யூ ட்யூப் குழுமமும் இன்று வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து யூ ட்யூப் நிறுவனத்தின் குடும்பம் மற்றும் கற்றல் சேவைத் துறையின் சர்வதேச தலைவர் மாலிக் டுகார்ட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

'யூ டியூப் கிட்ஸ்' என்பது இந்திய குழந்தைகளுக்கு என்றே சிறப்பாக உருவாக்கப்பட்ட கற்றலுக்கு உதவும் விஷயங்கள் நிரம்பிய பெரிய டிஜிட்டல் நூலகமாகும்.

லட்சக்கணக்கான இந்திய குழந்தைகள் இத்தகைய விஷயங்களை அணுகி கற்று, அதன்மூலம் புதிய விஷயங்களை அறிந்து கொள்ள வாய்ப்புகளை உண்டாக்கும் வகையில் இந்த சேவை இந்தியாவில் அறிமுகம்  செய்யப்படுகிறது.

பல்வேறு வகைப்பட்ட திறன்களை உடைய, விரைவாக வளர்ந்து வரும் இந்திய குழந்தைகளின் சமூகத்தில் இதன் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். 

தனிச்சிறப்புடன் கூடிய, குழந்தைகள் விரும்பத்தக்க வகையில் இந்த செயலியானது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதுஅலைபேசிகளில் இயங்கும்படி இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் தாங்கள் விரும்பும் தகவல்களை 'குரல் வழி சேவை; மூலம் கணடறியும் வசதியம் இதில் உள்ளது. 

இன்று முதல் கூகிள் ப்ளே ஸ்டார் மற்றும் ஆப் ஸ்டோர்களில் இந்த செயலியானது தரவிறக்க கிடைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.