அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பஞ்சாப் சட்டசபை தீர்மானத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்: மொத்தமாக ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்!

ஹரியானவுடனான நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்து பஞ்சாப் சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப்  மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று.

News image
Updated On :10 நவம்பர் 2016, 1:02 pm

DIN

சண்டிகர்: ஹரியானவுடனான நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்து பஞ்சாப் சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப்  மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

பஞ்சாபில் நடைமுறையில் உள்ள சட்லெஜ்-யமுனா இணைப்பு கால்வாய் திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யும் வகையில் 2004-ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இதனால் அண்டை மாநிலமான ஹரியானா கடுமையிலாக பாதிக்கப்பட்டது. இதற்கு எதிராக உச்ச நீதியமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பஞ்சாப் மாநில அரசின் நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி அந்த சட்டத்தை தள்ளுபடி செய்வதாக இன்று அறிவித்தது.  இந்த தீர்ப்பை எதிர்த்து, அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா செய்து கடிதத்தை, சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இவர்களோடு முன்னாள் முதல்வரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அம்ரித் சிங்கும் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்து, ராஜினாமா கடிதத்தை மக்களவை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார். சபாநாயகர் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.