அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அரசின் திட்டத்தால் ஐதராபாத் நகராட்சியில் குவிந்த கோடிகள் !

ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுக்களை  செல்லாததாக அறிவித்த மத்திய அரசின் திட்டத்தினால், ஐதராபாத் நகராட்சிக்கு சொத்து வரிகள் மூலமாக ரூபாய் 160 கோடி வருவாயாக கிடைத்துள்ளது.

News image
Updated On :15 நவம்பர் 2016, 12:50 pm

DIN

ஐதராபாத்; ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுக்களை செல்லாததாக அறிவித்த மத்திய அரசின் திட்டத்தினால், ஐதராபாத் நகராட்சிக்கு சொத்து வரிகள் மூலமாக ரூபாய் 160 கோடி வருவாயாக கிடைத்துள்ளது.

பிரதமர் மோடி கடந்த எட்டாம் தேதி அன்று தற்பொழுது புழக்கத்தில் உள்ள ரூபாய் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். ஆனால் பழைய நோட்டுக்களை தங்கள் கைவசம் வைத்துள்ளவர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் சொத்துவரிகள் உள்ளிட்டவற்றை செலுத்த அதனை பயன்படுத்தலாம் என்று பின்னர்  அறிவிப்பு வெளியானது.

அதன் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த ஐதராபாத் நகராட்சி அலுவலகத்தில் வரி பாக்கிகளை செலுத்த பொதுமக்கள் குவிந்தனர்.  வங்கிகள் மற்றும் பணம் வழங்கும் தானியங்கி இயந்திரங்களின் முன்னால் வரிசையில் நிற்பதை விட, நகராட்சி அலுவலகத்தில் வரியை செலுத்தி விடலாம் என்றுதான் மக்கள் விரும்புகின்றனர்.

அந்த வகையில் ஒருங்கிணைந்த ஐதராபாத் நகராட்சி அலுவலகத்தில் கடந்த நான்கு நாட்களில் நில ஒழுங்குமுறை சட்டம், பழைய பாக்கிகள் மற்றும் சொத்து வரியாக ருபாய் 160 கோடி வசூலாகி உள்ளது.

வாரத்தின் முதல்நாளான நேற்று ரூபாய் 55 கோடி வசூலானதே ஒரு நாளில் வசூலான அதிக பட்ச  அளவாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.