அரசின் திட்டத்தால் ஐதராபாத் நகராட்சியில் குவிந்த கோடிகள் !
ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுக்களை செல்லாததாக அறிவித்த மத்திய அரசின் திட்டத்தினால், ஐதராபாத் நகராட்சிக்கு சொத்து வரிகள் மூலமாக ரூபாய் 160 கோடி வருவாயாக கிடைத்துள்ளது.


ஐதராபாத்; ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுக்களை செல்லாததாக அறிவித்த மத்திய அரசின் திட்டத்தினால், ஐதராபாத் நகராட்சிக்கு சொத்து வரிகள் மூலமாக ரூபாய் 160 கோடி வருவாயாக கிடைத்துள்ளது.
பிரதமர் மோடி கடந்த எட்டாம் தேதி அன்று தற்பொழுது புழக்கத்தில் உள்ள ரூபாய் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். ஆனால் பழைய நோட்டுக்களை தங்கள் கைவசம் வைத்துள்ளவர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் சொத்துவரிகள் உள்ளிட்டவற்றை செலுத்த அதனை பயன்படுத்தலாம் என்று பின்னர் அறிவிப்பு வெளியானது.
அதன் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த ஐதராபாத் நகராட்சி அலுவலகத்தில் வரி பாக்கிகளை செலுத்த பொதுமக்கள் குவிந்தனர். வங்கிகள் மற்றும் பணம் வழங்கும் தானியங்கி இயந்திரங்களின் முன்னால் வரிசையில் நிற்பதை விட, நகராட்சி அலுவலகத்தில் வரியை செலுத்தி விடலாம் என்றுதான் மக்கள் விரும்புகின்றனர்.
அந்த வகையில் ஒருங்கிணைந்த ஐதராபாத் நகராட்சி அலுவலகத்தில் கடந்த நான்கு நாட்களில் நில ஒழுங்குமுறை சட்டம், பழைய பாக்கிகள் மற்றும் சொத்து வரியாக ருபாய் 160 கோடி வசூலாகி உள்ளது.
வாரத்தின் முதல்நாளான நேற்று ரூபாய் 55 கோடி வசூலானதே ஒரு நாளில் வசூலான அதிக பட்ச அளவாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...