பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கெஜ்ரிவால் மீதான அவதூறு மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு!

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தன் மீது தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தில்லி முதல்வர் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

News image
Updated On :22 நவம்பர் 2016, 10:53 am

DIN

புதுதில்லி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தன் மீது தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தில்லி முதல்வர் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தில்லி கிரிக்கெட் சங்கத்தில் ஜெட்லி  தலைவராக இருந்த போது,நிதி முறைகேடுகள் நடந்ததாக, அவர் மீது தில்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து கெஜ்ரிவால் மீது அருண்ஜெட்லி ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு சிவில் மற்றும் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த அவதூறு வழக்குக்கு தடை விதிக்க கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு டெல்லி உயர்நீதி  மன்றத்தில்   கடந்த மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த மனுவை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.