கடந்த 17 நாட்களில் மத்திய அரசு எடுத்த 50 மிக முக்கிய முடிவுகள்

கள்ள நோட்டு மற்றும் கருப்புப் பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
கடந்த 17 நாட்களில் மத்திய அரசு எடுத்த 50 மிக முக்கிய முடிவுகள்


புது தில்லி: கள்ள நோட்டு மற்றும் கருப்புப் பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.

அன்றைய நாள் முதல் சரியாக 17 நாட்கள் மிக மிக முக்கியமான நாட்களாக மத்திய அரசுக்கும், இந்திய நாட்டு மக்களுக்கு இருந்தது.

அன்று முதல் இன்று வரை மத்திய அரசு எடுத்த மிக முக்கியமான 50 முடிவுகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

நவம்பர் 8

1. டிசம்பர் 30 வரை பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்.
2. வங்கிக் கணக்கு இல்லாதவர்களும் பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து 4 ஆயிரம் ரூபாய் வரை வங்கியில் மாற்றிக் கொள்ளலாம்.
3. நவம்பர் 23ம் தேதிக்குப் பிறகு இந்த தொகையில் மாற்றம் செய்யப்படும்.
4. வங்கியில் எவ்வளவு ரொக்கப் பணத்தையும் டெபாசிட் செய்யலாம்.
5. தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் எந்தக் கிளையிலும் பணத்தை டெபாசிட் செய்யலாம்.
6. உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு நாளில் அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாயை எடுக்கலாம்.
7. வாரத்துக்கு அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கலாம்.
8. காசோலை, டிடி, கிரடிட், டெபிட் கார்டு, நெட்பேங்க்கிங்கில் பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.
9. நவம்பர் 18ம்  தேதி வரை ஒரு ஏடிஎம் கார்டில் ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.2000 மட்டுமே எடுக்கலாம்.
10. டிசம்பர் 30ம் தேதிக்குள் பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியாதவர்கள் அதன்பிறகு ஆர்பிஐயில், உரிய ஆவணங்களைக் கொடுத்து புதிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.
11. நவம்பர் 9ம் தேதி அரசு மற்றும் தனியார் வங்கிகள் மூடப்படும்.
12. அனைத்து ஏடிஎம்களும், டெபாசிட் மெஷின்களும் நவம்பர் 9 மற்றும் 10ம் தேதி மூடப்படும்.
13. வங்கிகள் மற்றும் அரசு கருவூலங்கள் நவம்பர் 10ம் தேதி முதல் செயல்படும்.
14. முதல் 72 மணி நேரத்துக்கு ரயில் நிலையம், மருத்துவமனையின் மருந்தகம், கூட்டுறவு வங்கிகள், பெட்ரோல் பங்க், எரிவாயு சிலிண்டர் பெற, சர்வதேச விமான நிலையங்கள், பேருந்துகளில் பழைய ரூபாய் நோட்டுகள் ஏற்கப்படும்.

நவம்பர் 11ம் தேதி

15. பழைய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளும் கால அளவு நவம்பர் 14ம் தேதி வரை நீட்டிப்பு
16. நீதிமன்ற கட்டணங்களை செலுத்த அனுமதி.
17. நுகர்வோர் கூட்டுறவு கடைகளில் பணப்பரிமாற்றத்துக்கு அடையாள அட்டை அவசியம்.
18. மின் கட்டணங்களை செலுத்த அனுமதி.
19. மாநில, தேசிய சுங்கக் கட்டணங்கள் நவம்பர் 24ம் தேதி வரை ரத்து

நவம்பர் 13 (6வது நாள்)

20. ஊரக, புறநகர்ப் பகுதிகளில் மொபைல் பேங்க் மூலமாக பொது மக்களுக்கு புதிய நோட்டுகளைக் கொடுக்க ஏற்பாடு.
21. காசோலை, டிடி போன்றவற்றை மருத்துவமனைகள் ஏற்கவில்லை என்றால் புகார் அளிக்க உத்தரவு
22. மருத்துவமனைகளில் மொபைல் பேங்கிங் மூலம் பணப்பட்டுவாடா செய்ய ஏற்பாடு.
23. முதியவர்கள், மாற்றுத் திறனாளி, கர்பிணிகளுக்கு தனி வரிசை.
24. வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யவும், பணத்தை மாற்றவும் தனித்தனி வரிசை.
25. வியாபாரிகள் வங்கிக் கணக்கில் இருந்து 2,500 வரை எடுக்க அனுமதி.
26. பழைய ரூபாய் நோட்டைக் கொடுத்து புதிய ரூபாயை மாற்றிக் கொள்வதற்கான உச்ச வரம்பு 4,500 ஆக உயர்வு.
27. ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு 2,500 ஆக உயர்வு.
28. வாரத்துக்கு பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு 24 ஆயிரமாக உயர்வு.
29. ஓய்வூதியம் பெறுவோர் வாழ்வு சான்றிதழ் அளிக்க கடைசி தேதி ஜனவரி வரை நீட்டிப்பு.
30. செல்போன் வால்லெட், டெபிட், கிரெடிட் கார்ட் உபயோகத்தை அதிகரிக்க உத்தரவு

31. விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்கில் வாரத்துக்கு 25 ஆயிரம் வரை எடுக்கவும், கிஸான் கிரடிட் கார்டில் பணம் எடுக்கவும் அனுமதி.
32. காரீப் பருவ சாகுபடியில் விளைந்த பொருட்களை விற்பனை செய்து காசோலை அல்லது டிடியாகப் பெறும் விவசாயிகள் அதன் மூலம் ஒரு வாரத்துக்கு ரூ.25 ஆயிரம் வரை பணமாக மாற்றிக் கொள்ளலாம்.
33. பதிவு செய்திருக்கும் வியாபாரிகள் ஒரு வாரத்துக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை பெறலாம்.
34. விவசாய காப்பீட்டுக்கான இறுதித் தேதி 15 நாட்களுக்கு நீட்டிப்பு
35. திருமணம் வைத்திருப்பவர்கள் ரூ.2.50 லட்சத்தை வங்கியில் இருந்து பணமாக எடுக்க அனுமதி.
36. நவம்பர் 18 முதல் வங்கியில் நேரடியாக பணத்தை மாற்றிக் கொள்வதற்கான உச்ச வரம்பு 4500ல் இருந்து ரூ.2000 ஆயிரமாகக் குறைப்பு.
37. குரூப் சி ஊழியர்கள், ராணுவத்தினர், ரயில்வே ஊழியர்கள் சம்பள முன் பணமாக ரூ.10 ஆயிரம் பெற்றுக் கொள்ளலாம்.
நவம்பர் 21 (14வது நாள்)
38. அடையாள அட்டைக் காட்டி விவசாயிகள் பழைய நோட்டுகள் கொடுத்து விதைகளைப் பெறலாம்.

நவம்பர் 23 (16வது நாள்)
39. சிறு கடனாளர்கள் தங்கள் கடனை திருப்பி செலுத்த 60 நாட்கள் கால அவகாசம்.
40 பணப் பரிமாற்றத்துக்கான கட்டணங்கள் டிசம்பர் 31ம் தேதி வரை ரத்து.
41. இ-வால்லெட்கள் மூலம் பணப் பரிமாற்றம் செய்வதற்கான உச்ச வரம்பு ரூ.20 ஆயிரமாக உயர்வு.
42. இ-டிக்கெட்டில் ரயில் டிக்கெட் பதிவு செய்வதற்கான சர்வீஸ் கட்டணம் ரத்து.
43. வங்கிகளின் எஸ்எம்எஸ் சர்வீஸுக்கான கட்டணம் ரூ.1.50ல் இருந்து ரூ.0.50 ஆக குறைவு.
44. அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள், பங்குதாரர்களுக்கு நெட்பேங்கிக் போன்ற டிஜிட்டல் முறையில் ஊதியத்தை அளிக்க அறிவுறுத்தல்.

நவம்பர் 24 (17வது நாள்)
45. வங்கியில் பழைய நோட்டுகளைக் கொடுத்து புதிய நோட்டகளைப் பெறும் வசதி நிறுத்தம்.
46. வெளிநாட்டுப் பயணிகள் ரூ.5 ஆயிரம் வரை புதிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.
47. இனி 1000 ரூபாய் நோட்டகள் எங்கும் ஏற்றுக் கொள்ளப்படாது.
48. விதி விலக்கு அறிவிக்கப்பட்ட இடங்களிலும் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
49. 500 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு பள்ளிக் கட்டணம், போன் ரீசார்ஜ் உள்ளிட்டவற்றை செலுத்த விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
50. இந்த விதி விலக்கும் டிசம்பர் 15ம் தேதி வரை அமலில் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com