கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அரவிந்த் கேஜ்ரிவால் பாகிஸ்தானின் கதாநாயகன்: போஸ்டரால் பரபரப்பு

குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானின் கதாநாயகன்கள் என்ற தலைப்பில் பயங்கரவாதிகளுடன் கேஜ்ரிவால் புகைப்படம் இடம்பெற்ற போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :15 அக்டோபர் 2016, 7:12 am

DIN


அகமதாபாத்: குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானின் கதாநாயகன்கள் என்ற தலைப்பில் பயங்கரவாதிகளுடன் கேஜ்ரிவால் புகைப்படம் இடம்பெற்ற போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குஜராத்துக்கு வரவிருக்கும் நிலையில், பாகிஸ்தானின் கதாநாயகன் என்று கூறி, புர்ஹான் வானி, அரவிந்த் கேஜ்ரிவால், ஒசாமா பின்லேடன், ஹபீஸ் சயீத் ஆகியோரின் புகைப்படங்கள் வரிசையாக இடம்பெற்ற போஸ்டர், குஜராத்தின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர்களை அகற்றும் பணியில் ஆம் ஆத்மி தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலுக்கு ஆதாரங்களைக் காட்டுமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியதை அடுத்து, அவருக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.