
காஷ்மீருக்கு வந்த அனைத்துக்கட்சிக் குழுவினரை சந்திக்க மறுத்து, அமைதி பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போட்ட பிரிவினைவாத குழுக்கள் மீது கடும் நடவடிகைகள் எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
காஷ்மீரில் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வாணி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களின் விளைவாக காஷ்மீர் பகுதியில் தொடர் கலவரம் நடந்து வருகிறது.
இதனைத் தணிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி குழுவொன்று கடந்த வாரம் காஷ்மீருக்கு வருகை தந்தது. ஆனால் காஷ்மீர் பிரிவினைவாத குழுக்களின் தலைவர்கள் யாரும் இந்த குழுவை சந்திக்காமல் தவிர்த்தனர். அவர்களின் இந்த நடவடிக்கையினால் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு வாய்ப்புகள் உண்டாகவில்லை.
இதானால் மத்திய உள்துறை கடும் அதிருப்தியில் இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறிதாவது:
பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளில் கட்டுப்பாடுகள் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவர்களின் நலனுக்காக பெருமளவு அரசாங்க பணம் செலவு செய்யப்படுகிறது.
இது தொடர்பான இறுதி முடிவு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று மாலை இதர அமைச்சர்கள் மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அகியோரை கலந்து ஆலோசித்த பின்பு எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.