மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

10 கோடி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை எட்டிய பிளிப்கார்ட்!

புகழ்பெற்ற  இணைய வணிக விற்பனை தளமான  பிளிப்கார்ட் இந்தியாவில் பத்து கோடி வாடிக்கையாளர்களை எட்டி சாதனை படைத்துள்ளது. 

News image
Updated On :21 செப்டம்பர் 2016, 1:03 pm

புகழ்பெற்ற  இணைய வணிக விற்பனை தளமான  பிளிப்கார்ட் இந்தியாவில் பத்து கோடி வாடிக்கையாளர்களை எட்டி சாதனை படைத்துள்ளது. 

இது தொடர்பாக அந்த நிறுவனம் அறிக்கையொன்றை புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை புதன்கிழமை அன்று பத்து கோடி என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. இதன் மூலம் இந்திய இணைய  வணிக சந்தையில், இந்த எண்ணிக்கையை எட்டிப் பிடித்த முதல் நிறுவனம் என்ற பெருமையை பிளிப்கார்ட் சாதித்துள்ளது. 

இந்த ஆண்டு மார்ச் மாதம் ஏழு கோடி என்ற எண்ணிக்கையை எட்டி சாதனை படைத்த ஆறு மாதங்களுக்குள் தற்போது இந்த புதிய இலக்கு எட்டப்பட்டுள்ளது.  

இந்த எண்ணிக்கையானது இந்தியாவில் கம்பிவழி மற்றும் கம்பி வழியற்ற இணைய சேவை பயன்படுத்துவோரின்  மொத்த எண்ணிக்கையில் 63 சதவீதமாகும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனை குறித்து அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பின்னி  பன்சால் கூறும் பொழுது,'மக்கள் எல்லோரும் எளிதில் வாங்கக்  கூடிய, எல்லோருக்கும் எளிதில் பொருள்கள் கிடைக்கக் கூடிய, ஒரு பரந்து பட்ட தளத்தை உருவாக்கும் பணியில், இது சிறிய அளவிலான ஒரு முதல்படி என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.