அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு உதவுபவர் இவர்தான்: ரூபா புது குண்டு

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா விவகாரத்தில் மேலும் ஒருவருக்குத் தொடர்பு இருப்பதாக முன்னாள் சிறைத்துறை அதிகாரி ரூபா, செவ்வாய்கிழமை குற்றஞ்சாட்டினார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:43 pm

DIN

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரபப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளார். இவர் சிறைக்கு சென்ற நாள் முதல் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது.

இந்நிலையில், சசிகலாவுக்கு சிறையில் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக சிறைத்துறை முன்னாள் அதிகாரி ரூபா அதிரடி தகவலை வெளியிட்டு வருகிறார். 

அதுமட்டுமல்லாமல், கையில் பையுடன் சசிகலா வெளியே சென்று வந்தது போன்ற ஒரு விடியோ பதிவு வெளியானது. இதுகுறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், சிறைத்துறை கண்காணிப்பாளர்கள் இருவர் நள்ளிரவில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2 மாதங்களில் பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் மாற்றப்படுவது இது 6-வது முறையாகும்.

இந்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் அனைத்து நவீன வசதிகளும் செய்யப்பட்ட அந்த அறைகளில் சசிகலா பலரை சந்தித்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் வி.எஸ் பிரகாஷ் என்கிற ஆஸ்திரேலியா பிரகாஷ் என்பவன் தான். அவன் தான் இந்த ரகசிய ஏற்பாடுகளைச் செய்து தருபவன். 

சமீபத்தில் கூட மல்லிகார்ஜுன் என்பவரை சசிகலா சந்தித்துப் பேசினார். மேலும், அந்த அறைகள் அமைந்துள்ள வளாகம் மற்றும் அவ்வழியில் எந்த இடத்திலும் கண்காணிப்பு கேமரா கிடையாது. அவற்றை எல்லாம் அகற்றிவிட்டனர். பிரகாஷ் என்பவனுக்கு உதவி ஆய்வாளர் கஜராதா மகனூர் என்பவர் சிறை முழுவதிலும் பாதுகாப்புக்காக உடன் இருப்பார். 

இவை அனைத்துக்கும் சேர்த்து ரூ.2 கோடி வரை சிறைத்துறை கண்காணிப்பாளருக்கு லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. அதனை மல்லிகார்ஜுன் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் வழங்கினர் என ரூபா பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

மேலும், சசிகலா விவகாரத்தில் தகுந்த ஆதராங்களுடன் தான் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்களை விரைந்து ஆராய்ந்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.