மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

குல்பூஷண் ஜாதவை சந்திக்க தாய், மனைவிக்கு விசா வழங்க பாக். ஒப்புதல்: சுஷ்மா ஸ்வராஜ்

குல்பூஷண் ஜாதவை சந்திக்க அவரது தாயார் மற்றும் மனைவிக்கு விசா வழங்க பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :8 டிசம்பர் 2017, 2:31 pm

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ், உளவு பார்த்த காரணங்களுக்காக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இதை எதிர்த்து இந்தியா, சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் குல்பூஷணுக்கு அளித்த மரண தண்டனைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.  

இதனிடையே குல்பூஷண் ஜாதவைச் சந்திக்க அவரது மனைவிக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வருகிற 25-ந் தேதி அனுமதி வழங்கியது. எனவே, தனக்கு உரிய பாதுகாப்பு அளித்து கணவரை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று குல்பூஷண் மனைவி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியதாவது:

குல்பூஷண் ஜாதவைச் சந்திக்க அவரது மனைவிக்கு பாகிஸ்தான் அனுமதி வழங்கியது. இதனைத்தொடர்ந்து அவரது குல்பூஷண் தாயாருக்கும் அனுமதி வழங்கிட இந்தியா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

அதுமட்டுமல்லாமல் அந்த சந்திப்பின் போது பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இந்திய தூதரக அதிகாரி ஒருவர் உடனிருக்கவும் வேண்டுகோள் வைத்தோம். இதனை பாகிஸ்தான் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் குல்பூஷண் மனைவி மற்றும் தாயாருக்கு விரைவில் விசா வழங்குவதாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.