
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த இளம்பெண்ணின் முகத்தை எலிகள் கடித்துக் குதறிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹைதராபாத்தின் ஹபீப் நகர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் திங்கள்கிழமை அன்று குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவ்ரது உடலைக் கைப்பற்றிய அப்சல்கஞ்ச் காவல் நிலைய போலீசார் அதனை ஒஸ்மானியா பொது மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்குஅனுப்பி வைத்தனர்.
பிரேதப்பரிசோதனை முடிந்து பிணவறையில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் சடலத்தைப் பார்க்க அவளது உறவினர்கள் செவ்வாயன்று மருத்துவனை சென்றனர். அங்கே அந்த பெண்ணின்ம முகம் சிதைத்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் செய்தனர்.
இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த மாநில சுகாதாரத்துறை நிர்வாகிகள் உடனடியாக விசாரணையில் இறங்கினர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக் கல்வி இயக்குநர் ரமேஷ் ரெட்டி கூறியதாவது:
இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தவிடப்பட்டுள்ளது. பிணவறை பொறுப்பாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. எலி அந்தப் பெண்ணின் மூக்கு மற்றும் சில முக பாகங்களை சிதைத்துள்ளது என்று சந்தேகிக்கிறோம். நவீன வசதிகளுடன் கூடிய இம்மருத்துவமனையில், குளிர் பதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த அப்பெண்ணின் உடல் எப்படி சிதைக்கப்பட்டது என்பது குறித்து அறிய விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.