அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

'ஜாம்' (ஜன்தன் - ஆதார் - மொபைல்) பரிவர்த்தனைகளே அரசின் இலக்கு: ஜெட்லி 

'ஜாம்' எனப்படும் ஜன்தன் - ஆதார் - மொபைல் பரிவர்த்தனைகளே அரசின் இலக்காக உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2017, 6:03 am

DIN

புதுதில்லி: 'ஜாம்' எனப்படும் ஜன்தன் - ஆதார் - மொபைல் பரிவர்த்தனைகளே அரசின் இலக்காக உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் ஜேட்லி அரசின் ஒருங்கிணைந்த நிதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.அதில் அவர் தெரிவித்ததாவது:

மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். பல்லாண்டு காலமாக நடைபெற்று வந்த வரி ஏய்ப்பை தடுக்க அது உதவியது. தற்போது உள்ள நிலையில் உலக அளவில் பொருளாதார நிலை அத்தனை ஸ்திரமாக இல்லை. ஆனால் இந்தியாவில் பொருளாதாரம் நிலையானதாக உள்ளது.

நமது பொருளாதார காரணிகள் எல்லாம் சரியான அளவில் உள்ளன. இந்த நிலையில்தான் நிதி நிலைஅறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

'ஜாம்' எனப்படும் ஜன்தன் வாங்கி கணக்கு - ஆதார் அட்டை மூலம் ஒருங்கிணைந்த பணமற்ற மொபைல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதே அரசின் முக்கிய இலக்காக உள்ளது

இவ்வாறு தெரிவித்த ஜேட்லி  தனனுடைய உரையை  தொடர்ந்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.