புதுதில்லி: விரைவில் நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்த பின்பே மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளன.
உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி பிப்ரவரி மாதம் 4-அம தேதி தொடங்கி மார்ச்மாதம் 8-ஆம் தேதி வரை தேர்தல்கள் நடைபெற உள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜவாதி கட்சி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தன. அதில் விரைவில் நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்த பின்பே மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
மனு கொடுத்து விட்டு வந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஒருங்கிணைந்த ஜனதா தள தலைவர் கே.சி.தியாகி பேசியதாவது:
காங்கிரஸ் தலைமையில் 12-க்கும் மேற்பட்ட எதிர்கட்சிகள் இன்று தேர்தல் ஆணையரைச் சந்தித்தோம்.ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் தொடங்குவதற்கு மூன்று நாட்கள் முன்னதாக மத்திய பட்ஜெட்தாக்கல் செய்யயப்பட இருப்பது பற்றிய எங்களது கருத்தை வெளிப்படுத்தினோம். இவ்வாறு செய்யப்படுவதன் மூலம் மத்திய அரசுக்கு ஒரு நியாயமற்ற சலுகை கிடைப்பதோடு தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கும் எதிரானதாக அமைகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3வது நாளாக சரிந்த இந்திய பங்குச் சந்தை! சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு!

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். செல்கிறார் ஈரானின் வெளியுறவு அமைச்சர்!

இந்த ஆண்டின் மிக வெப்பமான நாள்! தில்லியில் 109.4 டிகிரி வெய்யில்!

ஜெயிலர் - 2 மெகா ஹிட் அடிக்கும்: யோகி பாபு
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


