புதுதில்லி: நீதிபதிகள் நியமனம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தன்னுடைய முகநூல் பக்கத்தில் எழுதியதற்காக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு உச்ச நீதிமன்ற அமர்வு முன்பாக இன்று நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு சமூகவலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவது வழக்கம். அந்த வரிசையில் நீதிபதிகள் நியமனத்தில் பின்பற்றப்படும் கொலிஜியம் நடைமுறை தொடர்பாக சர்சைக்குரிய கருத்துக்களை தன்னுடைய முகநூல் பக்கத்தில் சமீபத்தில் பகிந்திருந்தார்.
இதனால் அதிருப்தியடைந்த உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்துஅவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த பொழுது கட்ஜு சார்பாக அவரது வழக்கறிஞர் ராஜீவ் தவான் மன்னிப்பு கடிதத்தை தாக்கல் செய்தார்.
அதில் நீதிபதிகள் நியமன நடைமுறை மற்றும் ஒரு நீதி பரிபாலன அமைப்பாக உச்ச நீதிமன்றம் மீதும் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் கட்ஜு தெரிவித்தார். மேலும் தான் தெரிவித்த கருத்துக்களுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும்,குறிப்பிட்ட பதிவை நீக்கி விட்டதாவும் தெரிவித்துள்ளார்.
கட்ஜுவின் மன்னிப்பே ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் யூ.யூ.லலித் ஆகிய இருவரும் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3வது நாளாக சரிந்த இந்திய பங்குச் சந்தை! சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு!

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். செல்கிறார் ஈரானின் வெளியுறவு அமைச்சர்!

இந்த ஆண்டின் மிக வெப்பமான நாள்! தில்லியில் 109.4 டிகிரி வெய்யில்!

ஜெயிலர் - 2 மெகா ஹிட் அடிக்கும்: யோகி பாபு
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


