மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் "சூப்பர் கம்ப்யூட்டர்': மத்திய அரசு முடிவு

முழுவதும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலான "சூப்பர் கம்ப்யூட்டரை (அதிதிறன் கணினி) தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:30 pm

DIN

முழுவதும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலான "சூப்பர் கம்ப்யூட்டரை (அதிதிறன் கணினி) தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்கீழ் மூன்று கட்டங்களாக இந்த சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிக்கும் பணிகள் நடைபெறவுள்ளன. ரூ.4,500 கோடி மதிப்பிலான இந்தத் திட்டத்துக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.
நாடு முழுவதும் அறிவியல் ஆய்வுகளுக்கு சர்வதேச தரத்திலான கணினிகள் கிடைக்க வேண்டும் என்பதுதான்இத்திட்டத்தின் நோக்கமாகும். மூன்று கட்டமாக மொத்தம் 50 சூப்பர் கம்ப்யூட்டர்களை தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடர்பாக மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்றி வரும் விஞ்ஞானி மிலிந்த் குல்கர்னி கூறியதாவது:
முதல் கட்டத்தில் உருவாக்கப்படவுள்ள 6 சூப்பர் கம்ப்யூட்டர்களில் 3 கம்ப்யூட்டர்கள் வெளிநாடுகளில் வாங்கப்படவுள்ளன. அடுத்த 3 கம்ப்யூட்டர்களின் உதிரி பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் ஒருங்கிணைக்கப்படவுள்ளது.
இவை பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், கான்பூர், காரக்பூர், ஹைதராபாத் ஐஐடிக்கள், புணேவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிலையம், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிலையம் ஆகியவற்றில் நிறுவப்படும். இத்திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும்.
இரண்டாவது கட்டத்தில் சூப்பர் கம்ப்யூட்டரின் முக்கிய பாகங்கள் அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். மூன்றாவது கட்டத்தில் ஏறக்குறைய அனைத்து பாகங்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கும்.
இப்போது சர்வதேச அளவில் அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னிலையில் உள்ளன.
இந்தியாவில் 1988}ஆம் ஆண்டிலேயே சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்படும் பரம் சூப்பர் கம்ப்யூட்டர்கள் உருவாக்கப்பட்டன. எனினும், கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிக்கும் பணியில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.
இப்போது இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 25 சூப்பர் கம்ப்யூட்டர்கள் உள்ளன. இவை வானிலை, பருவநிலை மாற்றம், அணு ஆய்வு ஆகிய துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.