அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

தில்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள லோக் நாயக் பவனில் தீ விபத்து!

தில்லியில் நிதி த்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள லோக் நாயக் பவனில் இன்று மாலை  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:30 pm

DIN

புதுதில்லி: தில்லியில் நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள லோக் நாயக் பவனில் இன்று மாலை  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தில்லியின் கான் மார்க்கெட் பகுதிக்கு அருகே உள்ள ரபீந்த்ரா நகரில் லோக் நாயக் பவன் என்னும் கட்டிடம் அமைந்துள்ளது. இதில் மத்திய அரசின் நிதி, சிறுபான்மை நலத்துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளது.

அந்த கட்டடத்தின் மேல் தளத்தில் இருந்து இன்று மாலை திடீரென புகை வந்தது. அதைத் தொடர்ந்து தீ பற்றி எரியத் துவங்கியது. உடனே அங்கிருந்த ஊழியர்கள் வெளியேறினர்.

தகவல் கேள்விப்பட்டு இரண்டு வாகனங்களில் 25 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  முதல்கட்ட விசாரணையில் மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.