புவனேஸ்வர்: நாட்டிலேயே முதல் முறையாக சமூக வளர்ச்சி அலுவலராக சாதனா கின்னார் என்ற திருநங்கை நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக அறிவியல் கழக கல்வியியல் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.
ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் 25 ஆயிரம் பழங்குடியினர் குழந்தைகளுக்கு மழலையர் வகுப்பு முதல் முதுநிலை வகுப்பு வரையில் கல்வி வழங்கிவரும் கலிங்கா சமூக அறிவியல் கல்வி நிறுவனம், தனது நிறுவனத்தில் சமூக வளர்ச்சி அலுவலராக சாதனா கின்னார் என்ற திருநங்கையை நியமித்துள்ளது.
கியோஞ்சர் நகரைச் சேர்ந்த சாதனா கின்னார் ஆரம்பத்தில் சதனா மிஸ்ரா என அழைக்கப்பட்டவர். சமூக சேவை மற்றும் வணிக நிர்வாகத்தில் எம்.ஏ., எம்பிஏ முதுகலை பட்டங்களை பெற்றுள்ளார்.
நாட்டிலே தனியார் துறையில் ஒரு திருநங்கை ஒருவர் சமூக வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது
புவனேஸ்வரில் கடந்த 14 ஆண்டுகளாக பாலினங்களை கண்டறிதல், பாலின பாகுபாடுகளை களைதல், திருநங்களை வளர்ச்சிநீரோட்டத்தில் ஒன்றிணைப்பது, நலிவுற்ற நிலையில் உள்ள குழந்தைகள் மற்றும் மகளிரின் மேம்பாட்டில் சேவையாற்றுவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்த சாதனாகின்னார், ஐநா மன்றத்தின் திட்டப்பணிகளுக்காகவும் பங்காற்றி வந்துள்ளார். 2016-ஆம் ஆண்டு அக்டோபரில் அமெரிக்காவில் ஒரு மாதம் நடந்த தலைமைப்பண்பு பயிற்சிமுகாமிலும் பங்கேற்று வந்துள்ளார்.
இதுகுறித்து கலிங்கா சமூக அறிவியல் கல்வி நிறுவனம் நிறுவன தலைவர் டாக்டர் அச்யுதா சமந்தா கூறுகையில், மகிழ்ச்சியாக உள்ளது. திருநங்கைகள் குறித்து சமூகத்தில் நிலவும் மனநிலை மாற்றம் பெறும் என்று கருதுகிறேன். மேலும் திருமங்கைகளை வளர்ச்சி நீரோட்டத்தில் கொண்டுவர இது உதவும் என கூறியவர், சாதனாகின்னாருக்கு தனது நிறுவனத்தில் சமூகமேம்பாட்டு அதிகாரியாக பணி ஆணையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
சாதனா கூறுகையில், இந்த வாய்ப்பு தனக்கு மிகுந்த தன்னம்பிக்கையையும், ஊக்கத்தையும் கொடுத்துள்ளதாகவும், இந்த வாய்ப்பை அளித்த கல்வி நிறுவன தலைவர் அச்யுதாவுக்கு தான் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
மேலும், கலிங்கா போன்ற ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிவதே எனது ஒரே ஒரு லட்சியம். அவை நிறைவேறியுள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் திருநங்கைகள் மீதான தவறான அபிப்ராயத்தை மாற்ற முயற்சி செய்வதாகவும், திருநங்கைகளுக்கு சமூகத்தில் சரியான அங்கீகாரம் அளிக்கும் போது அவர்களாலும் சிறப்பாக செயல்பட முடியும் என நம்புவதாகவும் சாதனா கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கல்பாக்கம் அதிவேக ஈனுலை நாட்டின் அணுசக்திப் பயணத்தில் ஒரு மைல்கல்: மோடி பாராட்டு!

ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 159 ரன்கள் இலக்கு!

எதிரணியின் பாராட்டைப் பெற்ற பார்சிலோனா வீரர்!

பவானிபூரில் முதல்வர் மமதா சாலைவலம்; பொதுமக்களுடனும் கலந்துரையாடல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

