மக்களவையில் நான் உரை நிகழ்த்தியபோது குறுக்கீடு செய்தார் மீரா குமார்
"கடந்த 2013-ஆம் ஆண்டில் மக்களவையில் நான் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது அப்போதைய அவைத் தலைவர் மீரா குமார் குறுக்கீடு செய்தார்' என்று வெளியுறவுத் துறை அமைச்சர்


"கடந்த 2013-ஆம் ஆண்டில் மக்களவையில் நான் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது அப்போதைய அவைத் தலைவர் மீரா குமார் குறுக்கீடு செய்தார்' என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக அவர் விடியோ ஒன்றையும் சமூக வலைதளமான சுட்டுரையில் (டுவிட்டர்) பதிவேற்றம் செய்துள்ளார்.
அந்த விடியோவில், கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மக்களவையில் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை குற்றம்சாட்டி சுஷ்மா ஸ்வராஜ் உரை நிகழ்த்துவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
அவர் உரையாற்றிக்கொண்டிருந்த நேரத்தில், "நன்றி', "சரி' என்ற இரண்டு வார்த்தைகளையும் அப்போதைய மக்களவைத் தலைவர் மீரா குமார் இடைவிடாமல் சொல்லிக் கொண்டிருப்பதும் இடம் பெற்றிருக்கிறது.
இதுதொடர்பாக சுட்டுரையில் சுஷ்மா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றுவந்த ஊழல் குறித்து மக்களவையில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தேன். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த என்னை முழுவதும் பேசவிடமால் அவைத் தலைவராக இருந்த மீரா குமார் குறுக்கீடு செய்தார். மேலும், நான் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அமளியில் ஈடுபட்டிருந்த அமைச்சர்களையும் அவர் தடுக்கவில்லை.
மக்களவையில் நடுநிலைத்தன்மையுடன் செயல்படாத அவரைத்தான் தற்போது எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தியுள்ளன என்று அந்தப் பதிவில் சுஷ்மா குறிப்பிட்டுள்ளார்.
"6 நிமிட உரையில் 60 முறை இடையூறு ஏற்படுத்திய மக்களவைத் தலைவர்' என்று செய்தித்தாள் ஒன்றில் வெளியான செய்தியையும் சுட்டுரையில் சுஷ்மா இணைத்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிகார் ஆளுநராக பதவி வகித்த ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமார் நிறுத்தப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...