நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்திக்கின்றனர் விவசாயிகள்
தமிழக விவசாயிகள் இன்று பிற்பகல் நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்திக்கின்றனர்.


தமிழக விவசாயிகள் இன்று பிற்பகல் நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்திக்கின்றனர்.
விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் கடந்த இரண்டு வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக விவசாயிகள் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்திக்கின்றனர். விவசாயிகளுடன் திமுக எம்பி திருச்சி சிவாவும் அருண் ஜேட்லியை சந்திக்கிறார். தொடர்ந்து விவசாயிகள் மாலை 4 மணிக்கு மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கை சந்திக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...