மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பதற வைக்கும் தகவல்: காஷ்மீர் கல்வீச்சில் ஈடுபடுவோருக்கு ஊதியம்; வாட்ஸ்-அப்பில் உத்தரவு

காஷ்மீரில் காவல்துறை மற்றும் ராணுவத்தினர் மீது கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு பாகிஸ்தானில் இருந்து சம்பளம் வழங்கப்பட்டு வரும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

News image
Updated On :30 மார்ச் 2017, 9:49 am

DIN


ஸ்ரீநகர்: காஷ்மீரில் காவல்துறை மற்றும் ராணுவத்தினர் மீது கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு பாகிஸ்தானில் இருந்து சம்பளம் வழங்கப்பட்டு வரும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில், காவல்துறை, ராணுவ வீரர்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் கல் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை, காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் பல உண்மைகள் வெளியாகியுள்ளன. அதாவது, பாதுகாப்புப் படை வீரர்கள், அரசு ஊழியர்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தவும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தவும் தங்களுக்கு பணம் வழங்கப்படுவதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை தங்களுக்கு ஊதியமும், ஆடைகளும் சில சமயங்களில் காலணிகளும் கூட வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

பாதுகாப்புப் படை வீரர்கள், ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர், ராணுவ வீரர்கள்,எம்எல்ஏக்கள், அரசு வாகனங்கள் மீது நாங்கள் கல் வீசி தாக்குதல் நடத்துவோம் என்று கூறும் இளைஞர்கள், நாங்கள் செத்தாலும் சாவோமே தவிர எங்களுக்கு பணம் கொடுக்கும் நபர்களைக் காட்டிக் கொடுக்க மாட்டோம் என்று உறுதியாகக் கூறுகின்றனர்.

அதோடு, பெட்ரோல் வெடிகுண்டுகள் தயாரிக்க தனியாக நிதி வழங்கப்படுவதாகவும், ஒரு வெடி குண்டு தயாரிக்க நான் 700 ரூபாய் வாங்குவதாகவும், சுமார் 50  முதல் 60 வெடிகுண்டுகளைத் தயாரித்து அரசு வாகனங்கள் மீது வீசுவோம் என்று பட் என்ற இளைஞன் கூறியுள்ளான்.

நாங்கள் 2008ம் ஆண்டு முதல் கல் வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறோம். ஒரு நாளைக்கு 700 முதல் 1000 ரூபாய் வரை கிடைக்கும். வெள்ளிக்கிழமைகளில் நடத்தும் கல் வீச்சு சம்பவத்துக்கு ரூ.1000 கிடைக்கும் என்கிறான் வாசிம் அகமது கான்.

ஆங்கில நாளிதழ் செய்தியாளர் ஒருவர் இந்த இளைஞர்களிடம், கல் வீச்சு சம்பவத்துக்கு எவ்வாறு அழைப்பு வரும் என்று கேட்டதற்கு, நாங்கள் அனைவரும் வாட்ஸ்-அப் குழுவில் இருக்கிறோம். எங்கு பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் சண்டை நடக்கிறதோ அங்கு உடனடியாக விரைந்து வந்து ராணுவத்தினர் மீது கல்வீச்சில் ஈடுபடுமாறு எங்களுக்கு தகவல் வரும் என்று தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.