மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மாமியாருக்கு வயது 102; மருமகளுக்கு வயது 80: மருமகளின் 'அடடே' அன்னையர் தின பரிசு!

உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில் தன்னுடைய 102-வயது மாமியாருக்கு, 80-வயது மருமகள் அன்னையர்  தின பரிசாக,...

News image
Updated On :15 மே 2017, 10:50 am

கான்பூர்: உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில் தன்னுடைய 102-வயது மாமியாருக்கு, 80-வயது மருமகள் அன்னையர்  தின பரிசாக, தான் வளர்த்த ஆடுகளை விற்று கழிப்பறை கட்டிக்கொடுத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தனா. இவரது வயது 80. இவருடைய மாமியாருக்கு வயது 102. அன்னையர் தினமான நேற்று சாந்தனா தன்னுடைய மாமியருக்கு ஒரு எதிர்பாராத   பரிசினை வழங்கியுள்ளார்.

சமீபத்தில் பொதுவெளியில் மலம் கழிக்கச் சென்ற தனது மாமியாருக்கு கால் தடுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதால், அவருக்கு உதவவும் வகையில் வீட்டிலேயே கழிப்பறை கட்ட சாந்தனா முடிவெடுத்துள்ளார்.இதற்காக மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்ட அதிகாரிகளை அவர் அணுகியுள்ளார். ஆனால் அவர்களிடம் இருந்து சரியான உதவிகள்கிடைக்கவில்லை .

ஆனால் தன்னுடைய எண்ணத்தில் தளராத சாந்தனா கழிப்பறை கட்டுவதற்காக தான் வளர்த்து வந்த 5 ஆடுகளை விற்று பணம் திரட்டினார். அதனைக் கொண்டு தன் மாமியாருக்கு ஒரு கழிப்பறையை கட்டியுள்ளார்.

அன்னையர்  தின பரிசாக அவரது இந்த முயற்சியானது மனதினைநெகிழ்ச்சி செய்வதாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.