எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தின் கணினிகளில் வைரஸ் தாக்குதல்

ஆந்திர மாநிலம் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் உள்ள 10 கணினிகளில் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

News image
Updated On :17 மே 2017, 4:55 am

DIN

திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் உள்ள 10 கணினிகளில் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த சில நாள்களாக சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் "ரேன்சம்வேர்' வைரஸ் தாக்குதலால் பல்வேறு கணினி செயல்பாடுகள் முடங்கியுள்ளன.

இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து கணினிகளைக் காக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், இந்த வைரஸை ஏவி விட்டது யார் என்பது தெரியாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், வட கொரியாவுக்கு ஆதரவாக செயல்படும் லாசரஸ் இணையவழி ஊடுருவல் கும்பல் இந்த வைரஸ் தாக்குதலின் பின்னணியில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் உள்ள 10 கணினிகளில் வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாகவும், வைரஸ் தாக்குதலால் கணினியில் வைக்கப்பட்டிருந்த நிர்வாக விவர கோப்புகள் அனைத்தும் அழிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைரஸ் தாக்குதலால் பக்தர்களின் தரிசனத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என தேவஸ்தானம் சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.