அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். அணி மீண்டும் பிரமாண பத்திரங்கள் தாக்கல்

அதிமுக தலைமைக்கு உரிமை கோரி தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் சுமார் ஒன்றரை லட்சம் பக்கங்கள் அடங்கிய பிரமாண பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் திங்கள்கிழமை தாக்கல்

News image
அதிமுக தலைமைக்கு உரிமை கோரி தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில், தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்வதற்காக வாகனத்தில் எடுத்து வரப்பட்ட ஒன்றரை லட்சம் பக்
Updated On :29 மே 2017, 10:02 pm

DIN

அதிமுக தலைமைக்கு உரிமை கோரி தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் சுமார் ஒன்றரை லட்சம் பக்கங்கள் அடங்கிய பிரமாண பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலாவின் தலைமைக்கு எதிராக அக்கட்சியின் பொருளாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் திரும்பினார். அவரது அணியில் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர் முனுசாமி, மக்களவை, மாநிலங்களவையில் உள்ள 12 அதிமுக எம்.பி.க்கள், 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சேர்ந்தனர். இதையடுத்து கட்சித் தலைமைக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் பன்னீர்செல்வம் தரப்பு முறையிட்டது. இதேபோல, சசிகலா தலைமையை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சார்பில் பெரும்பான்மை அதிமுக நிர்வாகிகள் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.
இதையடுத்து அதிமுகவில் இரு பிரிவுகள் உள்ளதாகக் கருதிய தலைமைத் தேர்தல் ஆணையம், அதிமுக பெயரை இரு பிரிவினரும் பயன்படுத்தக் கூடாது; இந்த விவகாரத்தில் தீர்வு காணப்படும்வரை சசிகலா தரப்பு "அதிமுக அம்மா' கட்சி என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு "அதிமுக புரட்சித் தலைவி அம்மா' கட்சி என்றும் அழைக்கப்படும் என்று அறிவித்தது.
இதையடுத்து இரு தரப்பினரும் தங்கள் தலைமைக்கான ஆதரவை நிரூபிக்கக் கூடிய ஆதாரங்களை தாக்கல் செய்ய, ஜூன் இரண்டாவது வாரம் வரை தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்தது.
இதன்படி, சசிகலா தரப்பில் மாவட்ட, வட்ட அளவில் உள்ள கட்சி நிர்வாகிகள், அடிப்படைத் தொண்டர்கள் ஆதரவு தெரிவிக்கும் கடிதங்களுடன் கூடிய 12 ஆயிரத்து 700 பிரமாண பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட நடவடிக்கையில் கட்சி விதிகள் மீறப்படவில்லை என்பதை விளக்கும் ஆதாரங்கள் தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன.
இதேபோல, பன்னீர்செல்வம் ஆதரவு அணியினர் அவரது தலைமையை ஆதரித்து, இரு முறை பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து திங்கள்கிழமை (மே 29) மூன்றாவது முறையாக லட்சக்கணக்கான பக்கங்கள் அடங்கிய பிரமாண பத்திரங்களை பன்னீர்செல்வம் ஆதரவு அணியினர் தாக்கல் செய்தனர். மாநிலங்களவை அதிமுக முன்னாள் உறுப்பினரும் வழக்குரைஞருமான மனோஜ் பாண்டியன், பாபு முருகவேல் ஆகியோர் இந்த ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர்.
இதேபோல, சசிகலா தரப்பு ஆதரவை நிரூபிக்கும் வகையில், லட்சக்கணக்கான ஆதரவாளர்களின் கையெழுத்துகளுடன் கூடிய பிரமாண பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அதிமுக அம்மா கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.