காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை கிடையாது
காஷ்மீரை பிரச்னைக்குரிய பகுதியாக அறிவிக்கும் வரை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று பிரிவினைவாதத் தலைவர் சையது அலி ஷா கிலானி தெரிவித்தார்.


காஷ்மீரை பிரச்னைக்குரிய பகுதியாக அறிவிக்கும் வரை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று பிரிவினைவாதத் தலைவர் சையது அலி ஷா கிலானி தெரிவித்தார்.
'காஷ்மீரில் 5 மாவட்டங்களில் மட்டுமே பிரச்னை' என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்த கருத்துக்கு கிலானி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகரின் ஹைதர்போரா பகுதியில் உள்ள தனது இல்லத்தில் வீட்டுச் சிறை வைக்கப்பட்டுள்ள கிலானி இதுகுறித்து மேலும் கூறியதாவது: காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை. பகுத்தறிவற்றவர்களே மத்திய அரசில் உள்ளனர். அரசியல் புரிதலும் அவர்களுக்கு இல்லை. அதனால், கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீர் பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது. சுய உரிமைக்காக காஷ்மீர் மக்கள் போராடி வருகின்றனர். இது மக்களின் பிரச்னையாகும். காஷ்மீர் மக்களுக்கு எதிராக மத்திய அரசு போர் தொடுத்துள்ளது.
காஷ்மீர் மீதான பார்வையை மத்திய அரசு மாற்றிக் கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு இணங்குவோம் என்று கிலானி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...