மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஹிமாச்சல், குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும்

ஹிமாச்சல பிரதேசம், குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 9:00 pm

DIN

ஹிமாச்சல பிரதேசம், குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
ஹிமாச்சல பிரதேசம், குஜராத் பேரவைத் தேர்தல்களில் மத்திய அரசின் ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பை குறித்து காங்கிரஸ் கட்சி பிரதானமாக முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறது. 
இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும். மோடி அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.
தமிழகத்தில் அதிமுக நான்கைந்து அணிகளாகச் சிதறி கிடக்கின்றன. எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. 
விரைவில் உள்ளாட்சி, சட்டப்பேரவை, மக்களவை தேர்தல் வந்தால்தான் இவையெல்லாம் முடிவுக்கு வரும். அப்போது தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றி பெறும்.
தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொய்வடைந்துள்ளன. 
டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் மணிசங்கர் அய்யர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.