அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மம்தா பானர்ஜியுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு

மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியை, சிவசேனைக் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, மும்பையில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 7:49 pm

DIN

மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியை, சிவசேனைக் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, மும்பையில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உலகளாவிய வர்த்தக மாநாடு, வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மும்பை வந்த மம்தா பானர்ஜி, அங்குள்ள தொழிலதிபர்கள், வங்கி உயரதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்து, மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்து வருகிறார். அவர் தனது பயணத்தை முடித்துக் கொண்டு வெள்ளிக்கிழமை கொல்கத்தா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மம்தா பானர்ஜியை, தெற்கு மும்பையில் அவர் தங்கியுள்ள ஹோட்டலுக்குச் சென்று உத்தவ் தாக்கரே சந்தித்தார். தாக்கரேவுடன் அவரது மகன் ஆதித்யா தாக்கரேவும் இருந்தார்.
மத்திய அரசிலும், மகாராஷ்டிர அரசிலும் சிவசேனைக் கட்சி அங்கம் வகித்து வரும் நிலையில், ரூபாய் நோட்டு வாபஸ் உள்பட பல்வேறு விவகாரங்களில் பாஜகவுக்கு எதிராகவும், மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்து வருகிறார். இதேபோல், மம்தா பானர்ஜியும், மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில், மம்தா பானர்ஜி-உத்தவ் தாக்கரே இடையேயான சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது.
எனினும், இந்தச் சந்திப்பின்போது அரசியல் பற்றி விவாதிக்கவில்லை என்று உத்தவ் தாக்கரே, செய்தியாளர்களிடம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
மம்தா பானர்ஜியை முதல் முறையாகச் சந்தித்துப் பேசினேன். இந்தச் சந்திப்பில் அரசியல் பற்றி பேசவில்லை. ஆனால், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற விவகாரங்களில், இருவரும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறோம். இதுதவிர, மும்பை மாநகராட்சியும், கொல்கத்தா மாநகராட்சியும் இணைந்து செயல்படுவதற்கான வழிமுறைகள் குறித்து இருவரும் விவாதித்தோம் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.