ஆந்திர சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது; இந்தக் கூட்டத்தொடரை அம்மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் புறக்கணித்துள்ளது.
ஆந்திரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரûஸச் சேர்ந்த சுமார் 21 எம்எல்ஏக்கள்அக்கட்சியிலிருந்து விலகி ஆளுங்கட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணைந்தனர்.
இவ்வாறு, ஆளுங்கட்சியில் இணைந்திருக்கும் தங்கள் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ}க்களை கட்சித் தாவல் தடைச்சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனறு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நீண்டகாலமாக கோரி வருகிறது. ஆனால், அவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வெள்ளிக்கிழமை தொடங்கும் ஆந்திர சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தங்கள் கட்சி பங்கேற்காது என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் எம்எல்ஏ ஜி. ஸ்ரீகாந்த் ரெட்டி, அமராவதியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். ஆனால், கட்சி தாவிய எம்எல்ஏக்கள் மீது சட்டப்பேரவைத் தலைவர் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத வரையில் நாங்கள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்கப் போவதில்லை என்றார் அவர்.
பேரவைத் தலைவர் அழைப்பு: இதனிடையே, பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்குமாறு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஆந்திர பேரவைத் தலைவர் கோடலே சிவபிரசாத் ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.