அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிக்கலாமா?: சிபிஐ பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்கலாமா? என்பது குறித்து பதிலளிக்குமாறு சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 8:01 pm

DIN

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்கலாமா? என்பது குறித்து பதிலளிக்குமாறு சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. 
அப்போது, கார்த்தி சிதம்பரத்தை நிபந்தனையுடன் 4 அல்லது 5 நாள்கள் வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்கலாமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக, வரும் வியாழக்கிழமை (நவ. 16) பதிலளிக்க வேண்டும் என்று சிபிஐ சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக, இதுவரை நடைபெற்ற விசாரணைகளின்போது கிடைக்கப்பெற்ற ஆவணங்கûளை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து நீதிபதிகளிடம் சிபிஐ தரப்பு தாக்கல் செய்தது. அந்த ஆவணங்களை நீதிபதிகள் படித்தனர். 
கடந்த 2007-ஆம் ஆண்டு, ப.சிதம்பரம், நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்காக, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்திடம் அனுமதி பெற்றதில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 
அதற்கு உடந்தையாக செயல்பட்டதாக, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ கடந்த மே மாதம் வழக்குப் பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து, சிபிஐ பல முறை அழைப்பாணை அனுப்பியும், அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை. இதனிடையே, அவரை கண்காணிக்கப்படும் நபராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. அவர் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.